காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி குறித்து அவர்களின் குடியுரிமை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்தும் அவர்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரியும் இன்று ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரவி தலைமையில் அதன் நிர்வாகிகள் ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்து எஸ்.பி. சக்திகணேசனை சந்தித்து மனு அளித்தனர்.
![complain registered](http://image.nakkheeran.in/cdn/farfuture/IvX05wcT8nMi5b4nQJ5klKKl-D5FPUqzeZ8I1PyY3uE/1568974617/sites/default/files/inline-images/rb%202.jpg)
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
காங்கிரஸ் கட்சியின் தலைவராக 19 ஆண்டுகளாக பதவி வகித்து வருபவரும், 22 ஆண்டுகளாக மக்களவை உறுப்பினராக பணியாற்றி வருபவர் சோனியா காந்தி அவர் பற்றியும் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் 10 ஆண்டுகளுக்கு மேலாக மக்களவை உறுப்பினராகவும் இருக்கும் ராகுல் காந்தியையும் அவர்களின் குடி உரிமை பற்றி தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்ற 18ஆம் தேதி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டையில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டிருந்தார் அமைச்சரின் கருத்து காங்கிரஸ் கட்சியின் கோடிக்கணக்கான தொண்டர்களை கொதிப்படைய செய்துள்ளது.
ஆகவே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்கள்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தமிழகம் முழுக்க காங்கிரஸ் கட்சியின் போலீசில் புகார் கொடுத்து வருகிறார்கள்.