கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், நாளை மறுநாளுடன் அங்கு தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது. இதனால், அரசியல் கட்சியினர் தீவிரமாக தங்கள் இறுதிக்கட்டத் தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பிரதமர் மோடி இன்றும் நாளையும் கர்நாடகாவில் 26 கி.மீ. தொலைவுக்கு பேரணி நடத்துகிறார்.
இந்நிலையில், இன்று காலை காங்கிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், கர்நாடகா மாநிலம் சித்தப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் மணிகாந்த் ரத்தோட் பேசும் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த ஆடியோவில் அவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அவரது குடும்பத்தை அழித்துவிடுவேன் என பேசுவது போல் உள்ளது.
Meet Manikant Rathod, the BJP candidate from Chittapur constituency, who has over 40 criminal cases against him. He also happens to be the "blue-eyed boy" of PM Modi & CM Bommai.
In this viral audio, the BJP leader can be heard saying-
*"Will wipe off Kharge's family"*
Here's… pic.twitter.com/NIcBMkgDhD— Congress (@INCIndia) May 6, 2023
இந்த ஆடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள காங்கிரஸ், மணிகாந்த் ரத்தோட் மீது 40 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது என அவர் மீது மீதமுள்ள வழக்குகளையும் பட்டியலிட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, “மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்ய பாஜக தலைவர்கள் இப்போது சதித்திட்டம் தீட்டி வருகின்றனர். சித்தாப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் பதிவில் இருந்து இது தெளிவாகிறது” என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பதில் அளித்த கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, “இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். முழு விவகாரமும் விசாரணை செய்யப்பட்டு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.