






Published on 27/02/2020 | Edited on 27/02/2020
சென்னை திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி .பி.சாமி (57) உடல்நலக்குறைவால் கே.வி குப்பத்தில் உள்ள இல்லத்தில் காலமானார். திமுக முன்னாள் அமைச்சரான இவர் திமுக மீனவரணி செயலாளராக உள்ளார். அதேபோல் திமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திருவொற்றியூரில் கே.பி .பி.சாமி இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.