Skip to main content

சசிகலா என சொன்னவுடன்.. ''எப்படியாவது நாங்க சண்டைப்போட்டுக்கு இருக்கணும்...'' சிரித்துக்கொண்டே சென்ற ஓ.பி.எஸ்.

Published on 24/10/2019 | Edited on 24/10/2019

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளராக முத்தமிழ்ச்செல்வன் போட்டியிட்டார். திமுக வேட்பாளர் நா.புகழேந்தி போட்டியிட்டார். நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன், அதிமுக வேட்பாளராக நாராயணன் போட்டியிட்டார். இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. விக்கிரவாண்டி, நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். 


 

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது அவர், விக்கிரவாண்டியிலும், நாங்குநேரியிலும் அதிமுக வெற்றி பெறும் என்று சொல்லியிருந்தோம். அதன்படி இறுதிச்சுற்று முடிவில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும். புதுச்சேரியை பொறுத்தவரையில் அந்த தொகுதி ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக, முதலமைச்சராக இருந்த வைத்திலிங்கம் வெற்றி பெற்ற தொகுதி. அவர்கள் தொகுதியை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். 

 

எங்களைப் பொறுத்தவரையில் ஒன்று திமுகவிடம் இருந்தது, இன்னொன்று காங்கிரசிடம் இருந்தது. அந்த இரண்டு தொகுதியிலும் மக்கள் செல்வாக்கு எங்களுக்குத்தான் இருக்கிறது என்பதை நாங்கள் நிரூபித்து காட்டி வெற்றிப் பெற்றிருக்கிறோம்.
 

உள்ளாட்சித் தேர்தல் வரும், வராது என்ற பேச்சு இருக்கிறது... உள்ளாட்சித் தேர்தல் வர வாய்ப்புகள் இருக்கிறதா?
 

வரும், வராதா என்ற சொல்லுக்கே இங்கே இடமில்லை. உறுதியாக டிசம்பரில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். 
 

ஏற்கனவே சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர்தான் உள்ளாட்சித் தேர்தல் வர வாய்ப்புள்ளது என்று அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் சொல்லியிருந்தார்கள்..
 

ஏற்கனவே நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியில் டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். அந்த உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும். 


 

sasikala-ops



டிடிவி தினகரன் உங்கள் அணிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?
 

ஏற்கனவே இதற்கு உரிய பதிலை நாங்கள் சொல்லிவிட்டோம். தலைமைக் கழகத்தினுடைய நிர்வாகிகள் ஒன்றுக்கூடி உண்மையான தொண்டர்களுடைய இசைவு ஆகியவைகளைப் பெற்றுத்தான் குடும்பம் சார்ந்த அந்த 16 பேர்களை நீக்கினோம். மீண்டும் அவர்களை சேர்க்க வேண்டும் என்ற கேள்வி எழவில்லை. எழுந்தால் அதை தீர்மானிக்கக்கூடிய மிகப்பெரிய சக்தியாக எங்களுடைய பொதுக்குழு இருக்கிறது. 
 

பொதுக்குழு கூடித்தான் அந்த 16 பேரை சேர்ப்பற்றி முடிவு செய்வீங்களா?
 

ஏற்கனவே பதிலை சொல்லிட்டேன். திரும்ப திரும்ப எப்படியாவது என்னுக்கிட்ட... 
 

16 பேருக்குள் சசிகலாவும் வருவார்களா? என்ற கேள்விக்கு, ''எப்படியாவது நாங்க சண்டைப்போட்டுக்கு இருக்கணும்...'' என சிரித்தப்படியே சென்றார். 


 

சார்ந்த செய்திகள்