Skip to main content

முதல்வர் பதவிக்கு ஆசைப்படும் அமைச்சர்... எடப்பாடி பேச்சைக் கேட்காத அமைச்சர்கள்... அதிருப்தியில் அதிமுக சீனியர்கள்! 

Published on 01/05/2020 | Edited on 01/05/2020

 

admk



கரோனா சோதனை உபகரணங்கள் வாங்குவதில் ஏற்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளால் எடப்பாடியின் முதல்வர் நாற்காலிக்கு உள்ளுக்குள்ளேயே போட்டி நடப்பதாகச் சொல்கின்றனர்.  இது பற்றி விசாரித்த போது, அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு பக்கம் என்றால், ஜெயலலிதா இருக்கும்போதே வருங்கால முதல்வர் என்று பேனர் வைத்த மீன்வளத்துறை ஜெயகுமாரும் தற்போது தீவிரமாக இருக்கிறார் என்று கூறுகின்றனர். சக அமைச்சர்களிடமே எடப்பாடிக்குச் செல்வாக்கு இல்லை என்று ஜெயக்குமார் நினைத்து கொண்டுள்ளார்.


அதோடு, கரோனா நிவாரணத்துக்கு ஒவ்வொரு அமைச்சரும் கணிசமாக நிதியை வசூலித்துக் கொடுங்கள் என்று எடப்பாடி வேண்டுகோள் வைத்தும், யாரும் அசைந்து கொடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதையெல்லாம் பார்த்துத்தான், ஜெயக்குமாரும் எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கும் கட்சியின் சீனியர்களிடம் அடிக்கடி பேசிக் கொண்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இப்போது, தன் தொகுதியில் விநியோகிக்கும் கரோனா நிவாரணப் பொருட்களுக்கான பையில் கூட, எடப்பாடி படம் இல்லாமல், தன் படத்தை மட்டும் அச்சடித்து கொடுத்துள்ளதாகச் சொல்கின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்