திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் மறைவு கட்சி கடந்த இரங்கல் என்கின்ற அரசியல் நாகரிகத்தை வெளிப்படுத்தியிருப்பதாக சொல்கின்றனர். அதோடு, திமுக பொதுச்செயலாளர் பதவி அடுத்து யாருக்கு என்கின்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது என்கின்றனர். சீனியரான துரைமுருகன், பொருளாளராக போதுமான நிதி திரட்ட முடியாததால், அதை வேற யாருக்காவது கொடுத்துவிட்டு, தன்னைப் பொதுச்செயலாளராக ஆக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் என்று சொல்லப்படுகிறது. மாஜி மந்திரிகள் எ.வ.வேலு, பொன்முடி, பொங்கலூர் பழனிச்சாமி உள்ளிட்டோரும் இந்தப் பதவி மீது பார்வை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. கே.என். நேருவுக்காக தன்னிடமிருந்த கட்சியின் முதன்மைச் செயலாளர் பதவியை விட்டுக் கொடுத்தவரான டி.ஆர்.பாலு எம்.பி.யும் பொதுச்செயலாளர் நாற்காலி மீது கண் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களை கம்பேர் பண்ணும்போது ஜூனியரான பி.டி.ஆர்.பி.தியாகராஜன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோரும் எதிர்பார்ப்பில் இருக்கிறார் என்றும் கூறிவருகின்றனர்.
இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் என்ன முடிவில் இருக்கிறார் என்று விசாரித்த போது, பேராசிரியருக்காக 7 நாள் துக்கம் முடிந்ததும், படத்திறப்பு, நினைவேந்தல் கூட்டங்களுக்குப் பிறகு அவர் முடிவெடுப்பார் என்று சொல்லப்படுகிறது. மேலும் பொதுச்செயலாளர் ரேஸில் முந்துகிறவர் துரைமுருகன். அதனால் பொருளாளர் பொறுப்பு எ.வ.வேலுவுக் குக் கொடுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், எ.வ.வேலுவுக்கும் கரூர் அன்புநாதனுக்கும் நெருக்கம் என்று அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வில் ஐக்கியமானவருமான செந்தில் பாலாஜி கூறியதாக சொல்லப்படுகிறது.