Published on 04/11/2019 | Edited on 04/11/2019

நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் மனைவி ராஜம் காலமானார். அவருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அதிமுக கொள்கை பரப்பு முன்னாள் துணைச் செயலாளரும், மாநிலங்கள் அவை முன்னாள் உறுப்பினரும், பிரபல நகைச்சுவை நடிகருமான மறைந்த எஸ்.எஸ்.சந்திரன் அவர்களின் மனைவி சி.ராஜம் உடல்நலக்குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம்.
அன்பு சகோதரி ராஜம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம் என்று கூறியுள்ளனர்.