







Published on 22/03/2023 | Edited on 22/03/2023
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இன்று (22.03.2023) திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரை முருகன், கே.என்.நேரு, பொன்முடி, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு மற்றும் திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். மேலும் “ஒரு கோடி உறுப்பினர் சேர்க்க 'உடன்பிறப்புகளாய் இணைவோம்' என்ற மாபெரும் முன்னெடுப்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட உள்ளது. இந்த பெருமுயற்சியை ஏப்ரல் 3 ஆம் தேதியன்று தொடங்கி ஜூன் 3, 2023 கலைஞர் நூற்றாண்டு தொடங்குவதற்குள் இப்பணியை நிறைவேற்றுவதென இக்கூட்டம் முடிவெடுக்கிறது” என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.