![woman who threw a one-and-a-half-year-old child into a well](http://image.nakkheeran.in/cdn/farfuture/k1hfZ8-AHpmgZyxpp7x3ybxQ205T5-boGA05Rr2AhSU/1704532620/sites/default/files/inline-images/th-6_273.jpg)
கேரள மாநிலம் கொன்னியூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீகாந்தன் - சிந்து தம்பதியினர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. அதே பகுதியில் இவர்களுடைய உறவுக்கார பெண் பிந்து வசித்து வருகிறார். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்.
இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை பிந்து சிந்துவின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ஒன்றரை வயது ஆண் குழந்தை வீட்டின் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், சிந்து வெளியே துணி துவைத்துக் கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில், பிந்து தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை எடுத்துக்கொண்டு அங்கே உள்ள கிணறு வரை சென்றுள்ளார். அங்கு யாரும் இல்லாததால் குழந்தையை பிந்து கிணற்றில் வீசிவிட்டு வந்துள்ளார்.
இவரை வழிமறித்து எங்கே சென்று வருகிறார் என்று கேட்டபோதுதான், குழந்தை கிணற்றில் வீசப்பட்டது தெரியவந்தது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக கிணற்றுக்கு சென்று பார்த்தபோது குழந்தை இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பிந்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.