Skip to main content

டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள்... போராட்டத்திற்கு அனுமதியளித்த காவல்துறை...

Published on 27/11/2020 | Edited on 27/11/2020

 

Police give farmers permission to enter Delhi

 

டெல்லியை நோக்கி பேரணி செல்லும் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகளின் பொறுத்திரு டெல்லி காவல்துறை அனுமதியளித்துள்ளது. 

 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. விவசாயிகளின் போராட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மேற்கொண்டுள்ள 'டெல்லி சலோ' பேரணி டெல்லியை அடைந்துள்ளது. 

 

இந்த விவசாயிகள் பேரணி ஹரியானா மாநிலத்திலிருந்தபோது, இது முன்னேறாமல் இருக்கும் வகையில் காவல்துறையினர், எல்லையில் கூடியிருந்த விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகை குண்டு வீசியும் தண்ணீர் பீய்ச்சி அடித்தும் கூட்டத்தைக் கலைத்தனர். அதேநேரம் பேரணியைத் தடுப்பதற்காக பாஜக ஆளும் ஹரியானா மாநில எல்லையில் போலீஸார் குவிக்கப்பட்டதோடு, அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவும் போடப்பட்டது. இந்நிலையில், இன்று டெல்லி எல்லையிலும் பேரணியைத் தடுக்க, ஹரியானா- டெல்லி மாநில எல்லைகளை சீல் வைத்துக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால், காவல்துறையினர் மற்றும் விவசாயிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில், விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய காவல்துறையினர் அனுமதியளித்துள்ளனர். மேலும், போராட்ட களம் வரை போலீஸார் ஒழுங்குபடுத்துதலின்படி விவசாயிகள் பேரணி மேற்கொள்ள ஒத்துழைப்பு தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி சென்றடைந்த விவசாயிகள், வேளாண் சட்டங்களை எதிர்த்து அங்கு தொடர் போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்