உத்தரபிரதேச மாநிலத்தில் பிரக்யாராஜ்(அலகாபாத்) நகரத்தில் கடந்த 15ஆம் தேதி கும்பமேளா கோலாகலமாக தொடங்கியது. முதல் நாளே ஒரு கோடியே நாறபது லட்சம் பேர் குவிந்து, புனித நீராடினார்கள். 55 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மார்ச் 4ஆம் தேதி முடிவடைகிறது. ஒவ்வொரு நாளும் லட்ச கணக்கானோர் இங்கு வந்து புனித நீராடுகின்றனர்.
இந்நிலையில் பிரபல யோகா குரு, பதஞ்சலி நிறுவனருமான பாபா ராம்தேவ் கும்பமேளாவில் வந்து கலந்துகொண்டார். அப்போது அங்குள்ள சாதுக்களிடம் பேசிய அவர், “ராமர் மற்றும் கிருஷ்ணனை நாம் பின்பற்றுகிறோம். தங்கள் வாழ்நாளில் ஒருமுறை கூட அவர்கள் புகைத்தது இல்லை. பிறகு ஏன் நாம் புகைக்க வேண்டும். புகைக்கும் பழக்கத்தை கைவிட நாம் உறுதிமொழி ஏற்க வேண்டும். வீடு, தாய், தந்தை, உள்ளிட்ட அனைத்தையும் துறந்து விட்டு வர முடியும் நம்மால், ஏன் புகை பழக்கத்தை துறக்க முடியாது” என்று அவர்களிடம் அட்வைஸ் செய்துள்ளார்.