Skip to main content

சபரிமலை சன்னிதானத்தில் பரிகார பூஜை நடைபெற்றது... தந்திரி புதிய விளக்கம்...

Published on 05/02/2019 | Edited on 05/02/2019

 

nhvnvn

 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து 10 வயது முதல் 50 வயதுப் பெண்கள் அனுமதிக்க கேரள அரசு தீவிரமாக இருந்தது. ஆனால் ஐயப்ப பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகள் உள்ளிட்டோர் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த மாதம் பிந்து, கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து கோயிலில் பரிகார பூஜை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. பிந்து தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தான் அவர் உள்ளே நுழைந்தவுடன் பரிகார பூஜை நடத்தப்பட்டது என தாழ்த்தப்பட்டோர் நலசங்கத்தினர் புகாரளித்தனர்.

இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள சபரிமலை தந்திரி, ' கோவிலில் பரிகார பூஜை நடைபெற்றது உண்மைதான், ஆனால் பெண்கள் கோவிலுக்குள் நுழைந்ததுக்காக பூஜை நடத்தப்படவில்லை. கோவில் சன்னிதானத்தின் புனிதம் காக்கப்படவே பரிகாரபூஜை நடத்தப்பட்டது. மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை தொடங்கியதில் இருந்து சபரிமலையில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்ந்து எழுந்தது. இந்நிலையில் கோயிலின் புனிதத்தன்மையை காக்க பரிகாரபூஜை நடத்தப்பட வேண்டும் என்பது சாத்திரங்களில் கூறப்பட்டு இருப்பதால், அதற்காக பரிகாரபூஜை நடந்தது' என கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்