Skip to main content

கங்குலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மம்தா பானர்ஜி!

Published on 09/07/2021 | Edited on 09/07/2021

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவருமான (Board of Control for Cricket in India- 'BCCI') சவுரவ் கங்குலி தனது 49- வது பிறந்தநாளை நேற்று (08/07/2021) கொண்டாடினார். அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள், முன்னாள் வீரர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரும் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்தனர். 

 

அந்த வகையில், கொல்கத்தாவில் உள்ள சவுரவ் கங்குலியின் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்ப அதிர்ச்சிக் கொடுத்தார். பின்னர், கங்குலிக்கு மஞ்சள் நிற ரோஜாக்களைக் கொண்ட பூங்கொத்து மற்றும் இனிப்பு பாக்ஸ்-யை வழங்கி பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து, கங்குலி மற்றும் அவரது குடும்பத்தினருடன் சில நிமிடங்கள் கலந்துரையாடினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த படத்திற்கு சௌரவ் கங்குலி பாராட்டு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
sourav ganguly praised ajay devgn starring ar rahman musical maidaan movie

அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன், பிரியாமணி நடித்துள்ள படம் மைதான். இப்படம் இந்திய கால்பந்து ஆட்டம் குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி, 1952 மற்றும் 1962க்கு இடையில் இந்திய கால்பந்தில் பங்காற்றிய சையத் அப்துல் ரஹீமின் கதையை விவரிக்கும் வகையில் உருவாகியுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவான இப்படம் கடந்த 10ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, பாராட்டு தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் அவரது பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் புகழ்பெற்ற கால்பந்து பயிற்சியாளர் சையது அப்துல் ரஹீம் மற்றும் இந்திய கால்பந்தின் பொற்காலத்தின் வசீகரமான சித்தரிப்பான மைதான் படத்தை தவறவிடாதீர்கள். கட்டாயம் பார்க்க வேண்டிய இந்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படம். இந்திய கால்பந்து நட்சத்திரங்களின் வாழ்க்கையைப் பெரிய திரையில் பார்த்து கண்டுகளியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 
 

Next Story

முதல்வர் மு.க. ஸ்டாலின் ரமலான் வாழ்த்து!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Chief Minister MK Stalin Ramalan wishes 

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் ரமலான் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “நோன்புக் கடமைகளை முடித்து, ஈகைப் பண்பு சிறக்க ரமலான் திருநாளைக் கொண்டாடும் இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மனித குலத்துக்கு மகத்தான எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் நபியடிகள். கல்வியை ஆண், பெண் இருவருக்கும் சமமாக்கியது. நீதி மற்றும் அமைதியை வலியுறுத்தியது, ஏற்றத்தாழ்வை அறவே எதிர்த்தது. சகோதரத்துவத்தையும் சகிப்புத்தன்மையையும் வலியுறுத்தியது என அவர் காட்டிய வழி அனைவரும் பின்பற்றத்தக்கதாகும். இல்லாதோருக்கு உதவுவதையும் அனைவரிடத்தும் அன்பு செலுத்துவதையும் போதித்தவர் நபிகள் நாயகம்.

அவரது வழியில் வாழ்ந்து வரும் இசுலாமியத் தோழர்களின் நலன் காக்கும் அரசாகக் திமுக அரசு திகழ்ந்து வருகிறது. கடந்த 2007 இல் சிறுபான்மையினர் நல இயக்குநரகம் உருவாக்கியது. மிலாதுநபிக்கு அரசு விடுமுறை. இசுலாமியர்களுக்கு 3.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு என எத்தனையோ சாதனைகளைச் செய்த கலைஞரின் வழியில், எல்லார்க்கும் எல்லாம் என்ற கோட்பாட்டைக் கொண்ட திராவிட மாடல் அரசும் அவர்களது கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறது.

அதன்படியே, சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு மாநில அரசின் வாழ்நாள் அங்கீகாரம், மதச்சார்பு சிறுபான்மையினர் சான்றிதழை நிரந்தரச் சான்றிதழாக வழங்க அரசாணை, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறுபான்மையின மாணவர்களுக்கு. இனி 5 லட்சம் வரை கல்விக்கடன். இஸ்லாமிய மக்களுக்கான அடக்கஸ்தலங்கள் (கபர்ஸ்தான்) இல்லாத மாவட்டத் தலைநகரங்களில் தேவைப்படும் நிலத்தை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கையகப்படுத்தி மாநகராட்சி மற்றும் நகராட்சி சார்பில் கபர்ஸ்தான் அமைப்பதற்கு நிருவாக ஒப்புதல் வழங்கி அரசாணை என அண்மையில் எண்ணற்ற அறிவிப்புகளை  வெளியிட்டிருக்கிறோம்.

இதற்கெல்லாம். முத்தாய்ப்பாக மத்திய பா.ஜ.க. அரசு நிறுத்திவிட்ட சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை (Pre-matric scholarship), தமிழ்நாடு அரசு நிதி உதவியுடன் வக்ஃப் வாரியம் மூலம் வழங்கப்படும் என்ற மகத்தான அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறோம். இசுலாமியரைப் பாகுபடுத்தும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்படி, இசுலாமியர்களின் சமூக, பொருளாதார, கல்வி வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களின் உரிமைகளுக்காக என்றும் முன்னிற்கும் பெருமிதத்தோடு, உரிமையோடு இசுலாமியத் தோழர்கள் அனைவருக்கும் எனது ரம்ஜான் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.