Skip to main content

"இதுதான் நமக்கான வாய்ப்பு"... மக்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு..

Published on 06/04/2020 | Edited on 06/04/2020

 

மதம், சாதி மற்றும் வர்க்க வேறுபாடுகளைக் கடந்து மக்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய நேரம் இது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

 

rahul gandhi urges people to stay united against corona

 

 

 

உலகையே புரட்டிப் போட்டுள்ள கரோனா வைரசால் சர்வதேச அளவில் சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69,000-ஐ கடந்துள்ளது. 2,64,000 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை 4000க்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 109 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் வேகமாகப் பரவி வரும் இந்தக் கரோனாவைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 14 வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மதம், சாதி மற்றும் வர்க்க வேறுபாடுகளைக் கடந்து மக்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய நேரம் இது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், "மதம், சாதி மற்றும் வர்க்க வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்தியா ஒன்றுபடுவதற்கான வாய்ப்பாக கரோனா வைரஸ் உள்ளது. இந்தக் கொடிய வைரசைத் தோற்கடிப்பதே நமது பொதுவான நோக்கமாக இருக்கு வேண்டும். இரக்கம், பச்சாதாபம் மற்றும் சுய தியாகம் ஆகியவையே இதன் மையமாகும். நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டால் இந்த போரில் வெற்றி பெறுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்