Skip to main content

ஏப்ரல் -20ல் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் 

Published on 14/04/2018 | Edited on 14/04/2018
naidu

 

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி ஏப்ரல் 20ம் தேதி நாள் முழுவதும் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார்.

 

 பா.ஜ.க. அரசு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளாத காரணத்தினால், சந்திரபாபுநாயுடு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதேபோல், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலும் ஆந்திர மாநில எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டு பாராளுமன்றத்தை முடக்கினர். 

 

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க கோரி, மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறார் சந்திரபாபு நாயுடு அளித்து வருகிறார். இந்நிலையில், வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி,  நாள் முழுவதும் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட  முடிவு செய்துள்ளார்.

சார்ந்த செய்திகள்