Skip to main content

டாஸ்மாக் கடையில் தொடர் மோதல்; ரிஷிவந்தியம் அருகே பரபரப்பு

Published on 18/04/2025 | Edited on 18/04/2025
Series of clashes at TASMAC shop; tension near Rishivanthiyam

கள்ளக்குறிச்சியில் டாஸ்மாக் கடையில் இரு தரப்பினர் மோதிக் கொண்ட சம்பவம் நேற்று இரவு பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் அதே டாஸ்மாக் கடையில் மீண்டும் இரண்டு கிராம இளைஞர்கள் குழுவாக மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தொடர் மோதலால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்துள்ளது மாடம்பூண்டி பகுதி. இங்கு உள்ள அரசு டாஸ்மாக் கடையில் நேற்று இரவு இடையூர் மற்றும் மதுவூர் ஆகிய இரண்டு கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் அதே கிராமத்தைச் சேர்ந்த இருதரப்பு இளைஞர்கள் கட்டை, கற்கள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு கடுமையாக மோதி கொண்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து திருப்பாலபந்தல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர் மோதல் சம்பவங்களால் அந்த பகுதியில் உள்ள கிராமத்தினர் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என ஒருவரும் வலியுறுத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்