நேற்று மாநிலங்களவையில் நேற்று நடந்த விவாதத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.
![modi speech at rajya sabha](http://image.nakkheeran.in/cdn/farfuture/jM-BXLfXXToyB3qdyiUNdrXH5NHJBfXBT6ZhACxb7VE/1561617834/sites/default/files/inline-images/modi-ang_1.jpg)
மக்களவை தேர்தலில் அடைந்த தோல்விக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறைகூறுவது தவறான செயல் ஆகும் என கூறினார். மேலும் பேசிய அவர், "இந்த சபையில் உள்ள சில உறுப்பினர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பற்றி குறை கூறுகிறீர்கள். அவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன், மக்களவையில் வெறும் இரண்டு உறுப்பினர்களை மட்டுமே நாங்கள் கொண்டிருந்த காலமும் இருக்கிறது. எங்களை அனைவரும் கேலி செய்தனர்.
ஆனால் நாங்கள் தொண்டர்கள் மீது நம்பிக்கை வைத்தோம். நாங்கள் இந்த இடத்துக்கு வருவதற்காக கடுமையாக உழைத்தோம். தேர்தல் முறை குறித்து நாங்கள் ஒருபோதும் கேள்வி கேட்டது இல்லை. தேர்தலில் தோற்றவர்கள்தான் மின்னணு வாக்கு எந்திரங்களை குறை கூறுகின்றனர். நீங்கள் இப்படி கூறுவது உங்கள் தொண்டர்களுக்குத்தான் மனச்சோர்வை ஏற்படுத்தும்.
மேலும் தேர்தலுக்கு மறுநாள் வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டன என்ற செய்தியை எங்கேயும் பார்க்க முடியவில்லை. மேலும் மின்னணு வாக்கு எந்திரங்கள் குறித்து பேசுவதற்கு தேர்தல் கமிஷன் அழைத்தபோது, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை தவிர வேறு யாரும் கூட்டத்திற்கு வரவில்லை" என்று கூறினார்.