2020- ஆம் ஆண்டின் சக்திவாய்ந்த 100 பாஸ்போர்ட்டுகளில் இந்திய பாஸ்போர்ட்டுக்கு 84 ஆவது இடம் கிடைத்துள்ளது. முதலிடம் ஜப்பான் பாஸ்போர்ட்டுக்கு கிடைத்திருக்கிறது. அந்த நாட்டு பாஸ்போர்ட் இருந்தால், 191 நாடுகளுக்கும், சிங்கப்பூர் பாஸ்போர்ட் இருந்தால் 190, ஜெர்மனி, தென்கொரியா பாஸ்போர்ட் இருந்தால் தலா 189 நாடுகளுக்கும் செல்ல முடியும்.
இந்திய பாஸ்போர்ட் இருந்தால் பூடான், கம்போடியா, இந்தோனேஷியா, மகாவோ, மாலத்தீவு, மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து, கென்யா, மொரிஷியஸ், சிசெல்ஸ், ஜிம்பாப்வே, உகாண்டா, ஈரான், கத்தார் உள்ளிட்ட 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். ஆனால், இவற்றில் சில நாடுகளுக்கு சென்றவுடன் விசா வாங்க வேண்டியது அவசியமாகும்.
பின்லாந்து, இத்தாலி பாஸ்போர்ட் இருந்தால் 188, டென்மார்க், லக்ஸம்பெர்க், ஸ்பெயின் பாஸ்போர்ட்டுக்கு 187, பிரான்ஸ், ஸ்வீடன் பாஸ்போர்ட்டுக்கு 186.
ஆஸ்திரியா, அயர்லாந்து, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்விட்சர்லாந்து பாஸ்போர்ட்டுக்கு 185, பெல்ஜியம், கிரீஸ், நார்வே, பிரிட்டன், அமெரிக்கா பாஸ்போர்ட்டுக்கு 184, ஆஸ்திரேலியா, கனடா, செக் குடியரசு, மால்டா, நியூஸிலாந்து பாஸ்போர்ட்டுக்கு 183, ஹங்கேரி, லிதுவேனியா, ஸ்லோவாகியா பாஸ்போர்ட்டுக்கு 181 நாடுகளுக்கு விசா தேவையில்லை.
இந்திய பாஸ்போர்ட்டைக் காட்டிலும் சீனா பாஸ்போர்ட் சக்தி வாய்ந்தது. அந்த பாஸ்போர்ட்டை 71 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயன்படுத்தலாம்.