Published on 27/07/2022 | Edited on 27/07/2022
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று (27/07/2022) தீர்ப்பு அளித்துள்ளது.
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மெகபூபா முஃப்தி, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் அமலாக்கத்துறையினரின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர்.
அதன்படி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் உடனே கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது எனத் தெரிவித்த நீதிபதிகள், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ள முக்கியமான பிரிவுகளை உறுதிப்படுத்தினர்.
இதன் மூலம், அமலாக்கத்துறையினர் தங்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.