
கேரளாவைச் சேர்ந்தவர்கள் முகமது ரினாஷ் அரங்கிலோட்டு மற்றும் முரளிதரண் பெரும்தட்டா வலப்பில். இவருகள் இருவரும் துபாயில் வசித்து வந்தனர். இந்த நிலையில் முகமது ரினாஷ், துபாயைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்ததாக கூறி துபாய் நீதிமன்றம் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. அதே போல் முரளிதரன், அங்குள்ள ஒரு இந்தியரைக் கொலை செய்ததால் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.
தனித்தனி கொலை வழக்குகளில் சிக்கிய இரண்டு இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி, கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் உச்சநீதிமன்றம் மரண தண்டனையை நிறைவேற்றியது, இந்த சம்பவம் தொடர்பாக, ஐக்கிய அரபு அமீரகம் இந்திய தூதரகத்திற்குத் தகவல் தெரிவித்தது.
இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் அரசாங்கத்திற்கு கருணை மனுக்கள் மற்றும் மன்னிப்பு கோரிக்கைகளை அனுப்புவது உட்பட இந்திய குடிமக்களுக்கு சாத்தியமான அனைத்து சட்ட உதவிகளையும் இந்திய தூதரகம் வழங்கியதாகத் தெரிவித்துள்ளது.