





எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் தொடங்கியது. கரோனாவால் தள்ளி வைக்கப்பட்டு நடக்கும் தேர்வை 3,862 மையங்களில் 16.14 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழ், மலையாளம், பஞ்சாபி மொழிகள் முதன் முறையாக சேர்க்கப்பட்டு மொத்தம் 13 மொழிகளில் தேர்வு நடக்கிறது.
தமிழ்நாட்டில் 70 ஆயிரம் மாணவிகள், 40 ஆயிரம் மாணவர்கள் என மொத்தம் 1.10 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாட்டில் 18 நகரங்களில் உள்ள 224 மையங்களில் இளநிலை நீட் தேர்வு இன்று (12/09/2021) பிற்பகல் 02.00 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 05.00 மணிக்கு வரைக்கும் நடைபெறவுள்ளது.
புதுச்சேரியில் 14 மையங்களில் நடக்கும் நீட் தேர்வை 7,123 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மையங்களில் 'என் 95' முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றி, மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர்.