Skip to main content

இனி சி.பி.எஸ்.இ. நீட் தேர்வை நடத்தாது! - மத்திய அரசு அறிவிப்பு

Published on 12/06/2018 | Edited on 12/06/2018

நீட் நுழைவுத்தேர்வு இனி ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது. 
 

Neet

 

 

 

மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்தத் தேர்வு முடிவுகளால் மூன்று மாணவிகள் தற்கொலை செய்துகொண்டு தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். 
 

இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்தன. மொழியாக்கத்தில் பிழை, தேர்வு முடிவுக்கு முந்தைய பிந்தைய மாணவர்கள் எண்ணிக்கையில் மாற்றம், தமிழக மாணவர்களுக்கு பிற மாநிலங்களில் தேர்வுமையம் ஒதுக்கியது, தேர்வு முடிவு வெளியானதில் குழப்பம் என பல்வேறு பிரச்சனைகளைக் கடந்து முடிந்திருக்கிறது. 
 

 

 

இந்நிலையில், இனி வரும் காலங்களில் நீட் தேர்வை சி.பி.எஸ்.இ. நடத்தாது எனவும், தேசிய தேர்வு முனையம் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது. அதேபோல், இதுவரை நடந்ததுபோல் அல்லாமல், அடுத்த ஆண்டுமுதல் நீட் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்