



Published on 05/03/2022 | Edited on 05/03/2022
சர்வதேச மகளிர் தினம் வரும் மார்ச் 8- ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான (பொறுப்பு) டாக்டர் தமிழிசை சௌந்தராஜன் மற்றும் ஆந்திர மாநில சட்டப்பேரவை உறுப்பினரும், நடிகையுமான ரோஜா ஆகியோர் பெண் பணியாளர்களுடன் கேக் வெட்டி சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர். அதைத் தொடர்ந்து, கேக் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.