Skip to main content

கரோனா எதிரொலி... நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களை மூட உத்தரவு...!

Published on 16/03/2020 | Edited on 16/03/2020

சீனாவில் உருவான கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும்  5000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். அனைத்து நாடுகளும் கரோனா வைரஸை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.  

 

corona virus -  educational institutions Closed

 



இந்நிலையில் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், வணிகவளாகங்கள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றை வரும் 31ஆம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பேருந்து, ரயில் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்தை மிக குறைந்த அளவில் பயன்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.    
 

 

சார்ந்த செய்திகள்