Skip to main content

'சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி குறைப்பு வாபஸ்' - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

Published on 01/04/2021 | Edited on 01/04/2021

 

Interest rates of small savings schemes government order withdraw union finance minister

 

வங்கி சேமிப்பு, வைப்புத் தொகை திட்டங்கள், பிபிஎஃப் (PPF), KVB, பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியைக் குறைப்பதாக நேற்று (31/03/2021) நிதியமைச்சகம் அறிவித்த நிலையில், இந்த அறிவிப்பை வாபஸ் பெறுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

 

இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "2020 - 2021 நிதியாண்டின் கடைசி காலாண்டில் உள்ள சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் தொடரும். வட்டி குறைப்பு தொடர்பாக நேற்று (31/03/2021) வெளியான அறிவிப்பு வாபஸ் பெறப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். 

Interest rates of small savings schemes government order withdraw union finance minister

 

அதன்படி, வங்கி சேமிப்பு வட்டி விகிதம் 4.0% ஆகவும், ஓராண்டு, இரண்டாண்டு, மூன்றாண்டு கால வைப்பு நிதி வட்டி விகிதம் 5.5% ஆகவும், ஐந்து ஆண்டு கால வைப்பு நிதி வட்டி விகிதம் 6.7% ஆகவும், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்ட வட்டி விகிதம் 7.4% ஆகவும், பிபிஎஃப் (Public Provident Fund Scheme) வட்டி விகிதம் 7.1% ஆகவும் தொடருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்