Skip to main content

நெருப்போடு விளையாட வேண்டாம் - பாஜகவுக்கு எதிராக மம்தா சீற்றம்!

Published on 26/12/2019 | Edited on 26/12/2019

நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் சில வாரங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இந்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.



மேலும், சில மாநில முதல்வர்களும் இந்த சட்டம் எங்கள் மாநிலங்களில் நிறைவேறாது என்று உறுதியளித்துள்ளனர். இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா தலைமையில் கொல்கத்தாவில் இன்று பேரணி நடைபெற்றது. பேரணியில் பேசிய அவர், " பாஜக அரசு இந்த சட்டத்தை எதிர்த்து போராடும் நபர்களை மிரட்டுகிறது. மாணவர்களை அடக்க முயல்கிறார்கள். நெருப்போடு விளையாட வேண்டும். அவர்களை நான் எச்சரிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 
 

 

சார்ந்த செய்திகள்