பீகாரிலுள்ள ராஜ்கிர் மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் பயிற்சி மையம் இருக்கிறது. அந்த பகுதியின் டிஐஜியாக டி.கே. திரிபாதி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
திரிபாதி பயிற்சி மையத்திலுள்ள உணவு விடுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த காவாலர் அமோல் காரத் என்பவரிடம் வெந்நீர் எடுத்து வருமாறு கூறியுள்ளார். பிளாஸ்கில் கொண்டு வந்த வெந்நீரை டிஐஜி திரிபாதிக்கு கப்பில் ஊற்றிக் கொடுத்துள்ளார். அதிக சூடாக இருப்பதை உணராமல் அதை அப்படியே குடித்திருக்கிறார் டிஐஜி. அவரது ஆய் வெந்தது.
இதனால் டிஐஜி கோபம் அடைந்து, அமோல் காரத்தை திட்டியுள்ளார். இதன்பின் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட, ஆத்திரம் அடைந்த டி.ஐ.ஜி தன் கையில் வைத்திருந்த சூடான நீரை அமோல் மீது ஊற்றியுள்ளார்.
இதனால் அமோல் காரத்தின் முகம் வெந்தது. உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர். “விசாரணை அடிப்படையில் மேல், நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.