![anurag thakur](http://image.nakkheeran.in/cdn/farfuture/nqExm0TjujFqOGeYPUSW9ZZB1hoxZjx0fLQsdGCT96M/1629523229/sites/default/files/inline-images/fewf.jpg)
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர், தனது சொந்த மாநிலமான இமாச்சல் பிரதேசத்தில் ஜன்ஆசீர்வாத் யாத்திரையில் கலந்துகொண்டுள்ளார். இந்தநிலையில், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், கரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர், "சாத்தியமான கரோனா வைரஸின் மூன்றாவது அலையை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது. இதற்காக 23,123 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது அலை, மற்றவர்களைவிட குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என அச்சம் தெரிவித்துள்ளதால், குழந்தைகள் பராமரிப்பை வலுப்படுத்த சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்துவதற்காக 35,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.
மேலும், "கரோனா இரண்டாவது அலை ஏற்பட்டபோது, அதிக அளவில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவைப்படும் என யாருக்கும் தெரியவில்லை. தற்போது நாட்டில் ஏகப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளன" எனவும் அனுராக் தாக்குர் கூறியுள்ளார்.