Published on 13/07/2021 | Edited on 14/07/2021

இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை பாதிப்பு பெரும்பாலான மாநிலங்களில் கட்டுக்குள் வந்துள்ளது. ஆனால், கேரளாவில் கரோனா பாதிப்பு இன்னும் குறைந்தபாடில்லை. தற்போதும் தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டி பதிவாகிவருகிறது. இந்நிலையில், தற்போது கேரளாவில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி கடைகள் இரவு 8 மணிவரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், வங்கிகள் வாரத்தில் 5 நாட்கள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், வார இறுதி நாட்களில் ஊரடங்கு தொடரும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.