எல்லைப்பகுதியில் நடந்த மோதலுக்குச் சீனாவுக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் பா.ஜ.க.-வினரின் உருவபொம்மை எரிப்புப் போராட்டம் ஒன்று இணையத்தில் கேலிக்கு உள்ளாகியுள்ளது.
லடாக் பகுதியில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் 20 நிலையில், இந்தியா முழுவதும் சீனாவுக்கு எதிரான குரல்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் சீனாவுக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் பா.ஜ.க.-வினரின் உருவபொம்மை எரிப்புப் போராட்டம் ஒன்று இணையத்தில் கேலிக்கு உள்ளாகியுள்ளது.
மேற்கு வங்கத்தின் அசன்சோல் பகுதியில் ஒன்றுகூடிய பா.ஜ.க. தொண்டர்கள், சீனாவுக்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், சீனாவின் பிரதமர் (?) கிம் ஜாங் உன்னின் உருவபொம்மையை எரிப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த உருவபொம்மை எரிப்புப் போராட்டம் இணையத்தில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் உருவபொம்மைக்குப் பதிலாக, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உருவ பொம்மையை அவர்கள் எரிப்பதாக கூறியதும், கிம் ஜாங் உன்னை சீனப் பிரதமர் என்கூறியதுமே இந்தக் கிண்டல்களுக்குக் காரணமாகியுள்ளது. இந்தப் போராட்டத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
????????????????????????
— Lavanya Ballal | ಲಾವಣ್ಯ ಬಲ್ಲಾಳ್ (@LavanyaBallal) June 18, 2020
pic.twitter.com/OlpjHDj1ej