நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் சில வாரங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், நாடு முழுவதும் அதனை எதிர்த்து பேரணி, ஆர்ப்பாட்டம் என்று தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், இதுதொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, " என்ஆர்சி மற்றும் என்ஆர்பி ஆகியவற்றை சில மாநிலங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறார்கள். கேரளா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் முதலிய மாநிலங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது தேவையில்லாத ஒன்று. இவர்கள் மக்களை குழப்ப பார்க்கிறார்கள். மத்திய அரசு சட்டமியற்றினால் அதனை அனைவரும் அமல்படுத்த வேண்டும். அவ்வாறு செயல்படுத்தாத மாநிலங்களுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் நிறுத்தப்படும். இந்துக்களை துன்புறுத்துபவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லலாம்" என்றார்.