Skip to main content

கரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து பரிசோதனைகள் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்!

Published on 07/05/2020 | Edited on 07/05/2020

 

ayush medicines for corona in testing

 

கரோனா பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள பகுதிகளில் பணியாற்றும் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு இன்று முதல் ஆயுர்வேத மருந்துகள் கொடுக்கப்பட உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். 
 

கரோனா வைரஸால் இந்தியாவில் 52,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இதற்கான தடுப்பு மருந்தைக் கண்டறியும் பணிகளில் பல இந்திய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. சுமார் 30 தடுப்பு மருந்துகள் இந்தியாவில் சோதனை நிலையில் உள்ளன. இந்தச் சூழலில், இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகளையும் இதற்குப் பரிசோதனை செய்யவேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தன. இதனையடுத்து கரோனா பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள பகுதிகளில் பணியாற்றும் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு இன்று முதல் ஆயுர்வேத மருந்துகள் கொடுக்கப்பட உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து பேசிய அவர், "அஸ்வகந்தா, யஷ்டிமாடு, குடுச்சி பிப்பாலி, போன்ற ஆயுஷ் மருந்துகள் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் பணிபுரிபவர்களுக்குக் கொடுக்கப்பட்டு இன்று முதல் மருத்துவப் பரிசோதனைகள் தொடங்கியுள்ளன. ஐ.சி.எம்.ஆரின் தொழில்நுட்ப உதவியுடன் ஆயுஷ் அமைச்சகம், சுகாதார அமைச்சகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூட்டு முயற்சியான இதனை அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) உதவியோடு செயல்படுத்தியுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்