Published on 02/11/2021 | Edited on 02/11/2021

இந்தியாவில் ஏப்ரல் - மே மாதங்களில் கரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தது. அப்போது இந்தியாவில் தினசரி சுமார் 4 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. அதன்பிறகு தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவந்தது.
இந்தநிலையில், நேற்று (01.11.2021) இந்தியாவில் 10,423 பேருக்கு மட்டுமே கரோனா உறுதியாகியுள்ளது. கடந்த 250 நாட்களில் இந்தியாவில் பதிவான குறைந்த தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். அதேநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 443 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 15,021 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்தியாவில் இன்னும் 1,53,776 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் இதுவரை 3,36,83,581 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.