Skip to main content

அதிக வாக்குகள் பதிவான மாநிலம்!

Published on 21/05/2019 | Edited on 21/05/2019

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. இதில் அதிக வாக்குகள் பதிவான மாநிலமாக மேற்கு வங்கம் உள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளுக்கும் ஏழு கட்டங்களாகவே மக்களவை தேர்தல் ஆனது நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜக கட்சித் தலைவர்களுக்கிடையே கடுமையான வார்த்தை போர் ஏற்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பாஜக தேர்தல் பிரச்சாரத்திற்காக  மேற்கு வங்கத்திற்கு வரும் பாஜக தலைவர்கள் மற்றும் முதல்வர்களின் ஹெலிகாப்டர்கள் தரையிறங்க தடை, பாஜக பேரணிக்கு தடை என கடுமையான தடைகளை விதித்தார்.

 

 

WEST BENGAL

 

 

 

இதனால் இரு கட்சிகளும் மாறி மாறி இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு கொடுத்தனர். மேலும் ஒவ்வொரு நாளும் மக்களவை தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியையும், பாஜக கட்சியின் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்தார். அதே போல் பானி புயலால் மேற்கு வங்கத்தில் பாதிப்பு ஏற்பட அது குறித்த நிலவரங்களை கேட்டறிய முதல்வர் மம்தா பானர்ஜியை  பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசி தொடர்பு கொண்டதாகவும் ஆனால் மம்தா தொலைப்பேசி அழைப்பை ஏற்க மறுத்து விட்டார் என பிரதமர் மோடியே மேற்கு வங்க பிரச்சாரத்தின் போது தெரிவித்தார். மேலும் கடைசிக் கட்ட தேர்தல் மேற்கு வங்கத்தில் பாஜக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்ட பேரணியில் அமித்ஷா பங்கேற்றார். இந்த பேரணியின் போது பாஜக. மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதல் கடும் வன்முறையாக மாறியது.

 

 

MAMATA

 

 

இதில் மேற்கு வங்கத்தின் முக்கிய தலைவர் ஈஸ்வர் வித்யாசாகர் சிலை சேதமானது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு கட்ட மக்களவை தேர்தலிலும் மேற்கு வங்கத்தில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல், வாக்குச்சாவடிகளில் பதற்றம் போன்ற சூழல் ஏற்பட்டது. ஆனால் அதையெல்லாம் மீறி மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் சராசரியாக சுமார் 80% விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனால் இந்தியாவிலேயே அதிக வாக்குகள் பதிவான மாநிலமாக மேற்கு வங்கம் உள்ளது.

 

LOK SABHA ELECTION (WEST.BEN STATE)    PHASE WISE  VOTES
   PHASE-1`                         83.80 %                           69.50%
   PHASE-2                          81.72 %                           69.44%
   PHASE-3                          81.97 %                           68.40%
   PHASE-4                          82.84 %                           65.50%
   PHASE-5                          80.09 %                           64.16%
   PHASE-6                          80.16 %                           61.14%     
   PHASE-7                          73.51 %                           63.98%

 

 

 

தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆனால் வாக்கு சதவீதம் குறைவு என்பது அனைவரும் அறிந்தது. மேற்கு வங்க மாநில மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதையும், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்கு மேற்கு வங்க மக்கள் நமக்கு உதாரணமாக இருக்கின்றனர். எனினும் 17-வது மக்களவை தேர்தலில் சராசரியாக 67% விழுக்காடு வாக்குகள் பதிவானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்