Published on 19/10/2018 | Edited on 20/10/2018

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜோடா பதக்கில் தசரா கொண்டாட்டத்தின்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கோரவிபத்தில் ரயில் மோதி 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ’’உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ’’காயமடைந்தோர் விரைவில் குணமாக பிரார்த்திக்கிறேன்.’’என்றார். ’’ மீட்பு பணியில் மாநில அரசு, காங்கிரஸ் தொண்டர்களும் உடனடியாக ஈடுபட வேண்டும்’’ என்றும் அறிவுறுத்தியுள்ளார்.