விபத்தில் சிக்கிய கேரள தொழிலாளி ஒருவருக்கு 2.63 கோடி ரூபாய் நஷ்டஈடாக வழங்க கேரள மோட்டார் வாகன தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. திருவனந்தபுரம் வட்டியூர் பகுதியைச் சேர்ந்த ஹரிகுமார் திருவனந்தபுரம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2014 ஜூலை 20 ஆம் தேதி வீட்டில் இருந்து பைக்கில் வேலைக்கு செல்லும்போது அரசு பஸ்ஸுடன் பைக் விபத்தில் சிக்கியது. இதில் பலத்த காயமடைந்த ஹரிகுமார் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பின் காப்பாற்றப்பட்ட அவர் தற்போது வரை குழாய் வழியாகவே உணவு உட்கொள்ளும் நிலையிலுள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக 2015 மார்ச் ல் கேரள மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக இன்று தீர்பளித்துள்ள கேரள மோட்டார் வாகன தீர்ப்பாயம் பாதிக்கப்பட்டவருக்கு நஷ்டஈடாக ₹1.99 கோடியும், நீதிமன்ற கட்டணமான ₹ 3 லட்சமும், வழக்கு செலவுக்கு 17 லட்சம் உட்பட மொத்தம் 2.63 கோடி வழங்க தீர்ப்பளித்துள்ளது.