கேரளாவில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம், பாலக்காடு அருகே ஷோரணூரில் உள்ள பாரதப்புழா ஆற்றின் ரயில்வே மேம்பாலம் ஒன்று உள்ளது. இந்த ரயில்வே மேல்பாலத்தில் தொழிலாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அதிவேகமாக வந்த கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று, தண்டவாளத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 4 பேர் மீது மோதியது. இந்த விபத்தில் அந்த 4 பேருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், ஷோரணூர் பகுதியில் ரயில் நிறுத்தம் இல்லாததால், அதிக வேகமாக வந்த ரயில் அந்த 4 பேர் மீது மோதியுள்ளது என்று கூறப்படுகிறது. மேலும், உயிரிழந்த நான்கு பேரும் தமிழகத்தைச் சேர்ந்த வள்ளி, ராணி, லெட்சுமண் உள்ளிட்ட 4 ஒப்பந்த தொழிலாளர்கள் இந்த ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், மூன்று பேரின் உடல்களை மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒருவரின் உடலை மட்டும் கண்டுபிடிக்க முடியாததால், அந்த உடலை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். கேரளா ரயில் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.