Published on 17/12/2020 | Edited on 17/12/2020
![heavy rains puducherry schools holiday](http://image.nakkheeran.in/cdn/farfuture/j4MMII5fnNUf7dvswxgWEJay1WcmasuUePZv40wBDkQ/1608175527/sites/default/files/inline-images/pu32.jpg)
வளிமண்டல மேலடுக்கு சுழற்சிக் காரணமாக, தமிழகத்தில் காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம், நாமக்கல், திருவாரூர், புதுக்கோட்டை, தருமபுரி, மயிலாடுதுறை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிகாலை முதல் பலத்த மழை பெய்தது. அதேபோல் சென்னையில் அடையாறு, கிண்டி, மீனம்பாக்கம், தாம்பரம், பல்லாவரம், வண்டலூரில் பலத்த மழை பெய்தது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் கனமழை தொடர்வதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று (17/12/2020) விடுமுறை என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.