நாடு முழுவதும் வெங்காய விலை கடுமையான விலை உயர்வை சந்தித்துள்ள நிலையில், வெங்காயம் வாங்க உழவர் சந்தையின் கதவை உடைத்துக்கொண்டு மக்கள் விரைந்த சம்பவம் ஆந்திரா மாநிலத்தில் நடந்துள்ளது.
வெங்காய கிடங்கில் பணத்தை திருடுவதை விடுத்து வெங்காயத்தை திருடுவது, வெங்காய விவசாயிகள் ஆயுதங்கள் ஏந்தி வெங்காய பயிர் நிலத்திற்கு பாதுகாப்பு அளிப்பதும் பல இடங்களில் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், ஆந்திர அரசு அம்மாநில மக்களுக்கு உழவர் சந்தைகள் மூலம் மானிய விலையில் கிலோ 25 ரூபாய் அடிப்படையில் ஒரு குடும்ப அட்டைத்தாரருக்கு ஒரு கிலோ வெங்காயம் விற்பனை செய்வதாக அறிவித்தது.
இதற்காக இன்று காலை முதலே அம்மாநிலத்தில் உள்ள சந்தைகளின் முன்னிலையில் மக்கள் கூட்டம் கூட ஆரம்பித்தது. இதில், விஜயநகரம் உழவர் சந்தையில் அதிகாலை முதலே திரண்ட பெண்களும், ஆண்களும் ஒரு கட்டத்தில் கதவை உடைத்துக் கொண்டு விரைந்து வெங்காயம் வாங்க ஓடினர். அப்போது லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.