முகநூல் வழியாக எத்தனையோ கூத்துகள் அரங்கேறுகின்றன. இதுவரை ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் மோசடி செய்த புகார்களைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், ஒரு பெண்ணே ஆண் வேஷம் போட்டு இரண்டு பெண்களை திருமணம் செய்த கூத்து உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.
31 வயதான அந்தப் பெண்ணின் பெயர் ஸ்வீட்டி சென். ஆனால், கிருஷ்ணன் சென் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டு, முகநூல் கணக்கைத் தொடங்கினார். தனது முகநூல் பக்கத்தின் வழியாக பல பெண்களுடன் ஆணைப் போலவே சாட்டிங் செய்திருக்கிறார். 2013 ஆம் ஆண்டு முதல் முகநூலில் இயங்கிய இவர், தன்னை பெரிய தொழிலதிபரின் மகன் என்று அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

இதில் மயங்கிய நைனிடாலைச் சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். அந்தப் பெண்ணின் குடும்பத்திடம் இருந்து எட்டரை லட்சம் ரூபாய் அளவுக்கு பணம் பெற்றுள்ளார். அவளிடம் பணம் பெற முடியாத சமயத்தில் இன்னொரு பெண்ணையும் ஏமாற்றி திருமணம் செய்திருக்கிறாள். ஒருகட்டத்தில் தனது கணவன் ஆணல்ல என்பதை இரண்டாவது பெண் கண்டுபிடித்துவிட்டாள். ஆனால், தனது ரகசியத்தை வெளியிடாமல் இருந்தால், நிறைய பணம் பெற்றுத் தருவதாக கூறியிருக்கிறாள் ஸ்வீட்டி சென். இதையடுத்து அவள் மவுனமானாள்.
இந்நிலையில்தான், ஸ்வீட்டி மீது வரதட்சனைக் கொடுமை புகாரை முதல் மனைவி கொடுத்திருக்கிறார். இந்த புகாரின்பேரில் விசாரணை நடத்தியபோது ஸ்வீட்டியிடம் மேலும் 200 பெண்களின் போன் நம்பர்கள் இருந்துள்ளன. போலீஸ் விசாரணையில், ஸ்வீட்டியே தன்னை ஒரு பெண் என்று கூறியபிறகுதான் போலீசுக்கே உண்மை தெரிந்தது.
சின்ன வயதிலிருந்தே ஆணைப்போலவே உடையணிந்து பழகிய ஸ்வீட்டி சென், தனது மனைவிகளுடன் செயற்கை உறுப்பு சாதனங்களை பயன்படுத்தி காலத்தை ஓட்டியிருக்கிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
2014 ஆம் ஆண்டிலிருந்து ஒரு பெண்ணுடன்தான் வாழ்கிறோம் என்று தெரியாமல் ஒரு பெண் வாழ்ந்திருக்கிறாள் என்பதுதான் இந்த வழக்கில் மிகவும் சுவாரசியமானது.