மின்வாரிய தொழிலாளர்களுக்கு இரண்டு ஆண்டுகளாக, ஊதிய உயர்வு வழங்காததால், கடும் அதிருப்தியடைந்த தொழிலாளர்கள், நாளை முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் மின் வினியோக பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த சிஐடியூ நிர்வாகி சுப்பிரமணி,
தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர்கள் திட்டமிட்டபடி நாளை வேலைநிறுத்தம் நடைபெறும் என சிஐடியூ தொழிற்சங்கத்தினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். பேச்சுவார்த்தைக்கு மின்துறை அமைச்சர் எங்களை அழைக்கவில்லை. நாளை வேலைநிறுத்தத்தில் ஒருநாள் ஊதியத்தை பிடித்தால் கவலையில்லை.
நாளை அனைத்து மின்வாரிய அலுவலகத்திலும் மின் கட்டணம் செலுத்தும் கவுன்டர்கள் மூடப்படும். மின்வாரிய தொழிலாளர்களின் நாளைய வேலை நிறுத்தத்தில் 70% ஊழியர்கள் பங்கேற்கிறார்கள். இவ்வாறு அவர் கூறியள்ளார்.