Skip to main content

மத்திய , மாநில அரசுகளுக்கு பொதுமக்கள் இணையதளம் மூலம் கடிதம் அனுப்பலாம்!

Published on 05/03/2019 | Edited on 05/03/2019

மத்திய அரசின் "டிஜிட்டல் இந்தியா" (Digital India) திட்டத்தின் கீழ் பல்வேறு மத்திய அரசு துறைகள் மற்றும் மாநில அரசு துறைகள் மிண்ணணுக்கு மாறியுள்ளனர் என்பது அனைவரும் அறிந்தது. இந்த டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பது "National Informatics Centre" நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் மத்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது.மத்திய பணியாளர் , பொதுமக்கள் குறைபாடுகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகத்தின் கீழ்  ( Ministry of Personnel ,Public Grievances & Pensions ) இயங்கும்  "மையப்படுத்தப்பட்ட பொதுமக்களிடம் குறைதீர் மற்றும் கண்காணிப்பு அமைப்பு" (Centralized Public Grievance Redress And Monitoring System )"CPGRAMS" பொதுமக்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்கள் சேரவில்லை  மற்றும் தங்கள் பகுதியில் தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை உட்பட அனைத்தும் இணையதளத்தில் எளிமையாக மனு அளிக்கும் வகையில் இணையதளத்தை உருவாக்கி உள்ளது.இந்த இணைய தளத்தின் முகவரி : https://pgportal.gov.in/ ஆகும். இந்த இணைய தளம் பல்வேறு வசதிகளை உள்ளடக்கியது. இதில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தனித்தனியே மனு அளிக்கும் வசதி இந்த இணைய தளத்தில் உள்ளது. 

online letter sent


மனுதாரர் முதலில் இந்த இணைய  https://pgportal.gov.in/ பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதன் பின் தனக்கென்று நிரந்தர கணக்கை இந்த இணையளத்தில் தொடங்க வேண்டும். இதில் மனுதாரர் பெயர், தந்தை பெயர் , முகவரி , ஈ-மெயில் முகவரி, தொலைப்பேசி எண் , ரகசிய குறியீடு  உள்ளிட்டவை கட்டாயம் உள்ளீட்டால் மட்டுமே நிரந்தர கணக்கு எண் செயல்பட தொடங்கும். பின் மனுதாரரின் மனு மாநில அரசை சார்ந்ததாக இருப்பின் " மாநில அரசுகள் " (STATE GOVERNMENTs) என்பதை தேர்வு செய்து "OK" செய்ய வேண்டும். மேலும் மாநில அரசு சார்ந்ததாக மனு இல்லையெனில் "மத்திய அரசு" என்பதை தேர்வு செய்து எந்த துறைக்கு மனு சார்ந்தது என்பதை ஆராய்ந்து அந்த துறையை தேர்வு செய்ய வேண்டும். பின்பு செவ்வக வடிவில் கடிதம் எழுதுவதற்கென்று கட்டம் இருக்கும். அதில் மனுதாரர் ஆங்கிலம் ( அல்லது) ஹிந்தியில் டைப் செய்து " SUBMIT" என கிளிக் செய்ய வேண்டும். பின்பு பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் மற்றும் ஈ-மெயில் முகவரிக்கு கடிதம் அனுப்பியதற்கான "Acknowledgement No" எண் வரும். இந்த எண்ணை தங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

online letter

பின் எவ்வாறு மனுவின் நிலையை அறிவது ? மனுதாரர் ஏற்கனவே நிரந்தர கணக்கு எண் இருந்தால் அந்த இணையதள பக்கத்திற்குள் சென்று " USER NAME" மற்றும் ரகசிய குறியீட்டை ( Password) குறிப்பிட்டு "ok" செய்தால் மனுதாரரின் மனுவின் நிலை தற்போது எந்த துறையில் உள்ளது எந்த துறை சார்ந்த அதிகாரி பரிசீலனை செய்து வருகிறார் என்பதையும் , இதுவரை மனுதாரர் எத்தனை மனுக்களை இந்த இணையதளம் வாயிலாக அனுப்பியுள்ளார் என்பதும் , எத்தனை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்பது தொடர்பான முழு விபரங்கள் மனுதாரர் கணக்கில் இருக்கும். இந்த இணையதளத்தில் யார் யார் மனு அளிக்கலாம் ? பொதுமக்கள் , முன்னால் ராணுவ அதிகாரிகள் , ஓய்வூதியதாரர்கள் , முன்னால் அரசு அதிகாரிகள் உட்பட அனைவரும் இந்த இணைய தளத்தை பயன்படுத்தி புகார் மனுவோ ( அல்லது ) அரசின் திட்டங்கள் குறித்த கடிதத்தையோ மிக எளிமையான முறையில் அனுப்பலாம். தமிழக மக்கள் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு மிக எளிமையாக  இணைய தளத்தை மையமாக கொண்டு கடிதம் எழுதலாம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். "MyGrievance" என்ற மொபைல் செயலியும் உள்ளது. இந்த செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் டவுன்லோடு செய்து பின் எப்போது வேண்டும் எளிமையான முறையில் பயன்படுத்தி மனுதாரர் தீர்வு காணலாம்.

 

பி.சந்தோஷ் ,சேலம்  

சார்ந்த செய்திகள்