Skip to main content

உலகின் மிகச்சிறிய மருத்துவர்!!!

Published on 31/08/2018 | Edited on 31/08/2018

 

 

robot

 

டெக்ஸா பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் 'சௌடிக் பெடல்' (Soutik Betal) உலகத்திலே மிக நுண்ணிய அளவிலான மருத்துவ நானோ ரோபோட் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இந்த ரோபோ, அதன் அளவின் அடிப்படையில் மிக சிறிய ரோபோ என கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இவர் கண்டுபிடித்துள்ள அந்த ரோபோவின் அளவு 120 நானோமீட்டர் மட்டுமே. மேலும் இது மிக நுண்ணிய மின்காந்த அலைகளால் கட்டுப்படுத்தக்கூடிய பொருள்களால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ரோபோ உயிர் செல்களுடனும் செயல்படக்கூடியதால் வரும் காலங்களில் இது உலகின் பயங்கரமான நோய்களான 'கேன்சர் மற்றும் அல்சைமர்' போன்ற நோய்களுக்கு மருத்துவம் பார்க்கவும் உபயோகப்படுத்தலாம் என கூறப்படுகிறது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆடம் 'ஸ்ட்ராங்கா ஒரு டீ போடு'- அட இதற்கும் ரோபோவா 

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
Adam 'Stronga Put a Tea' - Oh Robo for this too

தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் இந்த நவீன காலகட்டத்தில் சிறு சிறு விஷயங்களை கூட மனித உழைப்பை குறைத்து தொழில்நுட்பத்தை வைத்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் உலகெங்கும் பெருகி வருகிறது. அந்த வகையில் அண்மையாக வீட்டு வேலைகளை செய்வதற்காக ரோபோக்கள் உருவாக்கப்பட்டது. சமீபத்தில் ஹோட்டலில் சர்வர்களுக்கு பதிலாக ரோபோக்கள் உணவை பரிமாறும் வீடியோ காட்சிகளும் வெளியாகியது.

இந்நிலையில் அமெரிக்காவில் லாஸ் வேகாஸ் நகரில் காபி, டீ உள்ளிட்ட பானங்களை ரோபோ ஒன்று தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது. நெவாடா மாகாணம் பேரடைஸ் நகரை சேர்ந்த 'ரிச் டேக் ரோபாட்டிக்ஸ்' என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பிரத்தியேக ரோபோ டீக்கடைக்காரரைப் போல ஒரு கோப்பையை எடுத்து நன்கு தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு, மனிதர்களைப் போலவே காபி, டீ ஆகியற்றை தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறது. காபி மட்டுமல்லாது ஐஸ் டீ, காக்டெயில் மது உள்ளிட்ட பானங்களையும் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

இந்த ரோபோவிற்கு ஆடம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் குவிந்து கொண்டு ரோபோ ஆடம்மிடம் டீ, காபி ஆர்டர் செய்து வாங்கும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

முடிவுக்கு வந்த போர் நிறுத்தம்; மீண்டும் தொடங்கிய தாக்குதல்

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

The ceasefire ended; The attack resumed

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்தும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

இந்த நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த நவ. 29 ஆம் தேதி தொடங்கிய தற்காலிக போர் நிறுத்தம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது மீண்டும் போர் துவங்கியுள்ளது. போர் விமானங்கள் மூலம் காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக் குழுவின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தற்போது மீண்டும் காசா மீது தாக்குதலை தொடங்கியுள்ளது இஸ்ரேல்.