Published on 10/04/2019 | Edited on 10/04/2019
தாய்லாந்தில் மாய் காவோ கடற்கரைப் பகுதியை ஒட்டி விமானநிலையம் ஒன்று அமைந்துள்ளது. கடற்கரைக்கு அருகில் இருப்பதால் விமானம் ஏறுவதும், இறங்குவதும் தரையிலிருந்து சில அடி உயரத்திலேயே நடக்கும். இதனை கடற்கரைக்கு வரும் பயணிகள் ஆச்சரியத்துடன் காண்பதோடு, சில சமயங்களில் அந்த விமானத்திற்கு அருகில் சென்று செல்ஃபி எடுக்க முயல்கின்றனர். இதனால் விமான இறக்கையில் இருந்து வரும் காற்றால் இழுக்கப்பட்டு உயிரிழக்கவும் செய்துள்ளனர். இந்நிலையில் இதனை தடுக்கும் பொருட்டு அந்த விமானநிலையத்தின் அருகில் நின்று யாராவது செல்ஃபி எடுத்தால் அபராதமும், அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனையும் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.