Published on 25/10/2018 | Edited on 25/10/2018

ஃபேஸ்புக் நிறுவனம் தற்போது புதிதாக ஒரு வசதியை தனது ஆப்-ல் கொண்டுவரவிருக்கிறது. இதுவரை சமூக வலைதளத்தில் ஆதிக்கம் செலுத்திவரும் டிக்டாக் (மியூசிக்கலி) ஆப் போல் ஃபேஸ்புக் நிறுவனமும் தனது ஆப்-ல் புதிதாக ஒரு வசதியை அறிமுகம் செய்யப்போகிறது. டிக்டாக் ஆப்களை உபயோகித்து செய்யக்கூடிய விஷயங்களை இனி ஃபேஸ்புக்கின் இந்தப் புதிய ஆப் மூலமாக செய்யலாம். அந்தப் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு புதிய ஆப் தயாரிக்கப் பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் மியூசிக்கலி ஆப் பயன்பாட்டாளர்களின் எண்னிக்கை குறைய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.