ஆப்பிள் ஐ - ஃபோன் எப்போதுமே தனி அங்கீகாரத்தைக்கொண்டது. ஆனால் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வின் மூலம் அதன் மேல் ஒரு சிறிய சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில் சிக்காகோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ கருவியை பொருத்துவதற்காக சென்றிருக்கிறார்கள். அப்போது உள்ளே சென்றவர்களின் ஆப்பிள் ஐ - ஃபோன், ஆப்பிள் வாட்ச் மற்றும் 40-க்கும் மேற்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்கள் மொத்தமாக செயலிழந்துள்ளது. இவ்வாறு நடப்பதற்கு காரணம் என்னவென்று ஆராயிந்து பார்த்தபோது, சுமார் 120 லிட்டர் ஹீலியம் வாயு ஐந்து மணி நேரமாக ஐ - ஃபோன் மற்றும் அதன் சாதனங்களுக்குள் சென்றதே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நடந்து முடிந்த பிறகு அனைத்து ஆப்பிள் ஃபோன்களுக்கும் இந்தப் பாதிப்பு இருக்கிறதா என்று ஆராய்ந்திருக்கிறார்கள். அதில் ஐ - ஃபோன் 6 மற்றும் அதற்கு அடுத்த மாடல்களில் மட்டும்தான் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது என்பது தெரியவந்துள்ளது. அதேசமயம் இந்தப் பிரச்சனை ஆண்ட்ராய்டு ஃபோன்களுக்கு எந்த வகையான பிரச்சனையும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.