உலகமெங்கிலும் ஓமிக்ரான் வகை கரோனா குறித்து அச்சம் எழுந்துள்ள நிலையில், உலகிலேயே முதல் முறையாக பிரிட்டனில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டு அண்மையில் ஒருவர் உயிரிழந்தார். இந்தசூழலில், ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் பேசிய சுகாதார செயலாளர் சஜித் ஜாவித், வரவிருக்கும் நாட்கள் மற்றும் வாரங்களில், ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம் என கூறியிருந்தார்.
இந்தநிலையில் பிரிட்டனில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை, புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அந்தநாட்டில் முதல்முறையாக, ஒரேநாளில் 78,610 ஆம் பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இந்த தினசரி கரோனா பாதிப்பு உயர்வுக்கு ஒமிக்ரான் முக்கிய காரணமாக இருப்பதாக கருதப்படுகிறது.
பிரிட்டனில் இதுவரை 10,000-கும் மேற்பட்டவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரிட்டனையடுத்து டென்மார்க்கில் அதிகம் பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்தநாட்டில் 4000-கும் மேற்பட்டவர்களுக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை 73 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.