அமெரிக்காவில் பிறந்த ஒரு குழந்தை குறித்த சுவாரசியமான விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 2001-ம் ஆண்டு அல்கொய்தா தீவிரவாதிகள், நியூயார்க்கில் உள்ள இரட்டை கோபுரத்தை குறிவைத்து நடத்திய விமான தாக்குதலில் சுமார் 3000 பேர் கொல்லப்பட்டனர். இதன் 18 ஆம் ஆண்டு நினைவு தினம் கடந்த 11 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இந்த தினத்தில் அமெரிக்காவில் பிறந்த ஒரு குழந்தை குறித்த தகவல்கள் இணையத்தில் வியப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த 11 ஆம் தேதி அமெரிக்காவின் டென்னிஸி நகரில் உள்ள ஜெர்மன்டவுன் பகுதியில் இரவு 9.11 க்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. சரியாக 9/11 தேதியில், இரவு 9.11 க்கு அந்த குழந்தை பிறந்துள்ளது. பிறந்த அந்த குழந்தையை எடை வைத்து பார்த்த செவிலியர்களுக்கு மேலும் ஒரு ஆச்சரியம் காத்திருந்துள்ளது. அந்த குழந்தையின் எடையும் 9.11 பவுண்டுகள் இருந்துள்ளன.
குழந்தை பிறந்த தேதி, நேரம், எடை அனைத்தும் ஒரே மாதிரி இருப்பது கண்டு பிரசவம் பார்த்த மருத்துவர்கள், செவிலியர்கள், பெற்றோர் என அனைவரும் வியந்துள்ளனர். இந்த அதிசய குழந்தை குறித்த செய்திகள் தற்போது இணையத்திலும் பலரையும் வியப்புள்ளாகியுள்ளது.