Skip to main content

ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிப்பு!

Published on 04/01/2022 | Edited on 04/01/2022

 

ghj

 

உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் ஒரு கோடி பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கரோனா மூன்றாம் அலை துவங்கியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் வரலாறு காணாத வகையில் கரோனா பாதிப்பு தினசரி பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் பாதிப்பும் அதிகமாக இருப்பதால் பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 

 

இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த வாரம் வரை 10 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த கரோனா பாதிப்பு தற்போது 40 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரு கோடிக்கு அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒரு வாரத்தில் 57 லட்சம் பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


 

சார்ந்த செய்திகள்