Skip to main content

சீனாவுக்கு அதிகரிக்கும் அழுத்தம் - குளிர்கால ஒலிம்பிக்கைப் புறக்கணிக்கும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Published on 09/12/2021 | Edited on 09/12/2021

 

CHINA WINTER OLYMPICS

 

ஒலிம்பிக் போட்டிகள், பாரா ஒலிம்பிக் போட்டிகள், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆகியவை ஒருநாட்டில் நடைபெறும்போது, மற்ற நாடுகளின் அமைச்சர்கள், அதிகாரிகள் அந்தப் போட்டிகளைக் காண சிறப்புத் தூதர்களாகப் பங்கேற்பார்கள். இந்நிலையில், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ளது.

 

இந்தச் சூழலில், சின்ஜியாங்கில் நடந்துகொண்டிருக்கும் இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், பிற மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றைக் கண்டிக்கும் விதத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை ராஜாங்க ரீதியில் புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவித்தது. அதனைத்தொடர்ந்து, சின்ஜியாங்கில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் மற்றும் தாங்கள் தொடர்ந்து எழுப்பிவரும் பல்வேறு பிரச்சனைகளுக்குப் பதில் நடவடிக்கையாகச் சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கை ராஜங்க ரீதியில் புறக்கணிப்பதாக ஆஸ்திரேலியா அறிவித்தது.

 

இவ்விரு நாடுகளை தொடர்ந்து தற்போது பிரிட்டன், கனடா, லிதுவேனியா ஆகிய நாடுகளும் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவை பின்பற்றி சீனாவின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் விதமாக சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கை ராஜங்க ரீதியில் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இது சர்வதேச அரங்கில் சீனாவுக்கு அழுத்தத்தை அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்